கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.. ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் மோடி..!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட "தி சபர்மதி ரிப்போர்ட்" என்ற திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில், கோத்ரா ரயில் சம்பவம் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இந்த சம்பவத்தை மையமாக வைத்து, இயக்குநர் தீரஜ் சர்ணா "தி சபர்மதி ரிப்போர்ட்" என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த நவம்பர் மாதம் இந்த படம் வெளியானது. குறிப்பிட்ட சில மாநிலங்களில், இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி இந்த படத்தை பார்த்து, படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அவருடன் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டு படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.