dark_mode
Image
  • Saturday, 18 May 2024

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான சஹா 5 ரன்களிலும், ஷுப்மன் கில் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை அபாரமாக விளையாடியது. இருவரின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்த வண்ணமே இருந்தது. வில் ஜாக்ஸ் சிக்ஸர் மழையை பொழிந்தார். இறுதியில் 16 ஓவர்களில் இலக்கை எட்டி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணிக்கு கிடைக்கும் 3-வது வெற்றி இதுவாகும்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்கள் (5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்தும், விராட் கோலி 44 பந்துகளில் 70 (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.
குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description