dark_mode
Image
  • Saturday, 18 May 2024

பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சிஎஸ்கே – நல்லா யூஸ் பண்ணி ஜெயிச்ச பஞ்சாப் கிங்ஸ்!

பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சிஎஸ்கே – நல்லா யூஸ் பண்ணி ஜெயிச்ச பஞ்சாப் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது லீக் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ருத்ராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்தார். அஜிங்க்யா ரஹானே 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

ஆரம்பத்தில் நன்றாக தொடங்கினாலும், 7ஆவது ஓவர் முதல் 13ஆவது ஓவர்கள் வரையில் சிஎஸ்கே மொத்தமாக 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும், 54 பந்துகள் ஒரு பவுண்டரி கூட சிஎஸ்கே அணிக்கவில்லை. அதோடு, இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தமாக 4 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளது.

கடைசியாக வந்த தோனி 11 பந்துகள் விளையாடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் ஓடும் போது ரன் அவுட்டில் வெளியேறினார். முதல் முறையாக இந்த சீசனில் தோனி ஆட்டமிழந்துள்ளார். இதுவரையில் தோனி களமிறங்கிய 7 இன்னிங்ஸ்களில் முறையே 37*(16), 1*(2), 1*(3), 20*(4), 28*(9), 4*(1), 5*(2) என்று ரன்கள் எடுத்துள்ளார்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் மற்றும் கஜிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பிராப்சிம்ரன் சிங் 13 ரன்களில் அறிமுக வீரர் ரிச்சர்டு கிளீசன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த சீசனில் முதல் முறையாக பந்து வீசிய ஷிவம் துபே, முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை கைப்பற்றினார். பேர்ஸ்டோவ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த ரைலீ ரோஸோவ் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஷஷாங்க் சிங் மற்றும் சாம் கரண் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஷஷாங்க் சிங் 25 ரன்னும், சாம் கரண் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் தீபக் சாஹர் 2 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே மற்றும் ரிச்சர்டு கிளீசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

 
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சிஎஸ்கே – நல்லா யூஸ் பண்ணி ஜெயிச்ச பஞ்சாப் கிங்ஸ்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description