dark_mode
Image
  • Thursday, 12 December 2024

வங்கக் கடல் காற்றழுத்தத்தின் தாக்கம் – மழை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

வங்கக் கடல் காற்றழுத்தத்தின் தாக்கம் – மழை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த கட்டடத்தை தாழ்வாக உருவாகியுள்ள நிலையில், இது இலங்கை மற்றும் தமிழக கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக இன்று மற்றும் நாளை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை இடி மின்னலுடன் பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
 
தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், திருவள்ளூர் மற்றும் சென்னையில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வங்கக் கடல் காற்றழுத்தத்தின் தாக்கம் – மழை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description