dark_mode
Image
  • Friday, 29 November 2024

BSNL Logo: பிஎஸ்என்எல் லோகோ, டேக்லைன் மாற்றம்.. 7 புதிய திட்டங்கள் அறிமுகம்!

BSNL Logo: பிஎஸ்என்எல் லோகோ, டேக்லைன் மாற்றம்.. 7 புதிய திட்டங்கள் அறிமுகம்!
ந்தியாவில் மொத்தம் நான்கு டெலிகாம் நிறுவனங்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்றாக பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் டாரிஃப்களை உயர்த்தின. இதனால், குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்கள் மத்திய அரசின் தகவல் தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறினர்.

இந்நிலையில், மத்திய அரசின் தகவல் தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு புதிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதேசமயம், அதன் புதிய இலச்சினை டெல்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இலச்சினையில் காவி நிறத்திலான உருண்டை மற்றும் இந்தியாவின் வரைபடம் இடம்பெற்றுள்ளது. அதேபோல கனெக்டிங் இந்தியா என ஏற்கெனவே இருந்த டேக்லைன் தற்போது கனெக்டிங் பாரத் என மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பயனர்களுக்கு 7 புதிய திட்டங்களையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தாமாகவே ஃபில்டர் செய்யும் வசதிகள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளன. காவி நிறத்தில் இலச்சினை மாற்றப்பட்டுள்ளதுடன் பாரத் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.

இந்நிலையில், இதனைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, "பா.ஜ.க. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி, அரசு நிறுவனங்களை காவி மயமாக்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அனைவரும் விரும்பும் காவியமான இத்தேசத்தின் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்?


வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோ வைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பிருந்த லோகோவில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது தற்போது பாரதத்தை இணைப்போம் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பா.ஜ.க.வின் கொடியின் நிறத்தை ஒத்திருக்கிறது.

புதியதாக கட்டிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம். அதே போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியிலிருக்கும் ஊழியர்களின் சீருடைகள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி, அரசு நிறுவனங்களை காவி மயமாக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த டி.டி. பொன்விழா மற்றும் இந்தி மாதம் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல். லோகோ அடுத்த சர்ச்சையாக மாறியுள்ளது.

 
BSNL Logo: பிஎஸ்என்எல் லோகோ, டேக்லைன் மாற்றம்.. 7 புதிய திட்டங்கள் அறிமுகம்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description