dark_mode
Image
  • Friday, 29 November 2024

4.5 ரிக்டர் அளவில் வங்கக்கடலில் நிலநடுக்கம்!

4.5 ரிக்டர் அளவில் வங்கக்கடலில் நிலநடுக்கம்!

ந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று மாலை சட்டென மாறிய வானிலையால் பயங்கரமான காற்று வீசத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 இன்று மாலை 3.40 மணிக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை

4.5 ரிக்டர் அளவில் வங்கக்கடலில் நிலநடுக்கம்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description