3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்க; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அதற்கடுத்து இரு நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். இது நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனால், இன்று
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
காரைக்கால் மாவட்டங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்
சென்னை
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்
அரியலூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம்
புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
திருச்சி
தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை
கடலூர்
மயிலாடுதுறை
காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்