dark_mode
Image
  • Friday, 29 November 2024

145 அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.!

145 அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். அந்த வகையில் 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டார கல்வி அலுவலர்கள் 145பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாவது;- "தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான ஆய்வை மேற்கொள்ளவும், பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வி திறன்களை மேம்படுத்தவும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும், 2 பள்ளிகளில் ஆய்வு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

 

மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த விவரங்களை 'எமிஸ்'தளம் வாயிலாக பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது. அந்த விவரங்களை கண்காணித்ததில், வட்டார கல்வி அலுவலர்கள் பலரும் 12-க்கும் குறைவான பள்ளிகளை மட்டுமே ஆய்வு செய்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டார கல்வி அலுவலர்கள் 145பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் ஓய்வு அல்லது மாறுதல் பெற்றவர்கள் தவிர, மற்ற அனைவரும் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

145 அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description