dark_mode
Image
  • Friday, 29 November 2024

14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரமா வீட்டுக்கு போங்க!

14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரமா வீட்டுக்கு போங்க!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழக்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரமா வீட்டுக்கு போங்க!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description