dark_mode
Image
  • Friday, 29 November 2024

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.. - தமிழ்நாடு அரசு உத்தரவு..!

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.. - தமிழ்நாடு அரசு உத்தரவு..!

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , புதுக்கோட்டை, நாமக்கல், கோவை திருப்பூர், நாகப்பட்டினம் , தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஐ.ஏ.எஸ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவ்நித் ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மதுமதி ஐ.ஏ.எஸ்., தூத்துக்குடி மாவட்டத்திற்கு வீர ராகவ ராவ் ஐ.ஏ.எஸ்., கள்ளக்குறிச்சிக்கு தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ்., திருப்பூருக்கு வள்ளலார் ஐ.ஏ.எஸ், கோவைக்கு நந்தக்குமார் ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டைக்கு சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம் ஐஏஎஸ்., நாகப்பட்டினத்திற்கு மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் மற்றும் சென்னைக்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் ஆகியோ கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.. - தமிழ்நாடு அரசு உத்தரவு..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description