விஜயுடன் கூட்டணி சேரும் கிருஷ்ணசாமி? மகாராஷ்டிராவை காட்டி தமிழக கட்சிக்கு கிருஷ்ணசாமி அனுப்பி மெசேஜ்2
சென்னை: 2026ல் கூட்டணி ஆட்சிக்கு தயாராகுங்கள். தமிழக அரசியல் கட்சிகளுக்கு 'மகாயுதி' கூட்டணி சொல்லும் பாடம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அனைத்து கட்சிகளுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக,முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களில் வென்று அசத்தி உள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கிறது.
மறுபுறம் காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ''2026ல் கூட்டணி ஆட்சிக்கு ஆயத்தமாகுங்கள்.. தமிழக அரசியல் கட்சிகளுக்கு 'மகாயுதி' கூட்டணி சொலும் பாடம்!'' என்ற பெயரில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில்திமுகவை விமர்சித்துள்ள கிருஷ்ணசாமி, நடிகர் விஜயின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை குறிப்பிட்டு காங்கிரஸை நேரடியாகவும், கம்யூனிஸ்ட்டை மறைமுகமாககவும் புதிய கூட்டணிக்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஒன்றிணைந்து பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள். சிவசேனாவை உடைத்து ஏக்நதா ஷிண்டேவும், சரத்பவார் கட்சியை உடைத்து அஜித் பவாரும் பாஜகவுடுன் ஒன்றிணைந்து கடந்த 2002 முதல் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அந்த கூட்டணி ஆட்சி தொடருமா ? என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புகளையும், கருத்துகளையும் விஞ்சி 288 இடங்களில் 233 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
ஆட்சியின் நலத்திட்டங்களால் வெற்றி பெற்றார்களா? கூட்டணிபலத்தால் வெற்றி பெற்றார்களா? எனில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற ''கூட்டணி ஆட்சி கோட்பாடு'' பலத்தால் ''மகாராஷ்டிரா மஹாயுதி அணி'' வெற்றி பெற்றுள்ளது. மாறாக, ஆட்சி அதிகாரத்தில் பங்க கொடுக்க மனமில்லாத 'திராவிட மாடல்' போன்ற கூட்டணியால் அல்ல!