dark_mode
Image
  • Friday, 29 November 2024

ராகுலின் 4வது தலைமுறை வந்தாலும் முடியாது: அமித் ஷா

ராகுலின் 4வது தலைமுறை வந்தாலும் முடியாது: அமித் ஷா
' ராகுலின் 4வது தலைமுறையினர் வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை கொண்டு வர முடியாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பலாமு என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் சாசன புத்தகத்தை ராகுல் காட்டுகிறார்.
ஆனால், உண்மையில் அந்த புத்தகம் அரசியல் சாசன புத்தகம் அல்ல. அவர் காட்டும் புத்தகத்தின் பிரதி ஒன்றை ஒருவர் பெற்றுள்ளார். எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் அரசியலமைப்பு என்று எழுதப்பட்டு உள்ளது. அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும் அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள்.

நவ.,26ஐ அரசியலமைப்பு தினமாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளது. சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அனுமதிக்காது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. ராகுலின் 4வது தலைமுறையினர் கூட காஷ்மீர் சிறப்பு சட்டத்தை கொண்டு வர முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ராகுலின் 4வது தலைமுறை வந்தாலும் முடியாது: அமித் ஷா

comment / reply_from

related_post

newsletter

newsletter_description