dark_mode
Image
  • Friday, 29 November 2024

மே 22ம் தேதி வரை குறை தீர்க்கும் மாதம்: வருமான வரித்துறை]

மே 22ம் தேதி வரை குறை தீர்க்கும் மாதம்: வருமான வரித்துறை]
2024,ஏப்ரல் 22 முதல் மே 22 வரை "குறை தீர்க்கும் மாதமாக" வருமான வரித்துறை கடைப்பிடிக்கிறது.
இந்த மாதத்தில், சிபிகிராம் (CPGRAM) மற்றும் இ-நிவாரண் (E-Nivaran) மூலம் இணைய வழியாகவும் மற்றும் பிற முறைகளின் மூலமாகவும், வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இது சம்பந்தமாக, இணையவழி மூலமாகக் குறை தீர்ப்பதைத் தவிர, வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் விரும்பினால், தங்கள் எல்லைக்குட்பட்ட மதிப்பீட்டு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும், வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளை, எல்லைக்கு உட்பட்ட வருமான வரி முதன்மை ஆணையர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி மற்றும் அவரது குழுவினர், ஏஎஸ்கே மையம் அல்லது அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக இடத்தில் (ஏஎஸ்கே மையம் இல்லாத இடங்களில்) ஏப்ரல் 24, 2024 முதல் மே 22, 2024 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10:30 மணி முதல் மதியம் 01:30 மணி வரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைப் பெற்று, அவற்றுக்கு தீர்வுகாண வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை தற்போதுள்ள ஆன்லைன் குறை தீர்க்கும் செயல்முறையுடன் கூடுதலாக 2024, ஏப்ரல் 24, மே 1,8,15,22 ஆகிய தேதிகளில் பெறலாம்.

அனைத்து வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
மே 22ம் தேதி வரை குறை தீர்க்கும் மாதம்: வருமான வரித்துறை]

comment / reply_from

newsletter

newsletter_description