dark_mode
Image
  • Friday, 29 November 2024

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது.

குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடி அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் பொழுது அங்கு உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிவது வழக்கம்.

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடி அடி மட்டுமே உள்ளதால், இந்தப் புராதன சின்னங்கள் முழுமையாக வெளியே தெரிகிறது. இதன்படி ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலையும் கோபுரமும் வெளியே தெரிகின்றன. அதேபோல கிறிஸ்தவ ஆலய கோபுரமும் தற்போது வெளியே தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு, விளைநிலங்கள் தரிசாகும் நிலைக்கு தள்ளப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்திற்காக ஜீன் 12-ம் தேதி முதல் இன்று வரை 91 டி.எம்.சி, திறக்கப்பட்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description