முன்னேற்றப்பாதையில் பி.எஸ்.என்.எல்.,; கடன் தொல்லை குறையுதுப்பா; பயனர் எண்ணிக்கை விர்ர்...!
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., சேவைக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதற்குத் தகுந்தபடி, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது.
கடந்த காலங்களில் கழுத்தை நெரிக்கும் வகையில் இருந்த கடன் தொகையை குறைப்பதில், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கடன் ரூ.40,400 கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி ரூ.23,297 கோடியாக குறைந்துள்ளது.