முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதில் பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படவுள்ளது.