dark_mode
Image
  • Friday, 29 November 2024

முதல்முறையாக ரூ.40,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ஆப்பிள்!

முதல்முறையாக ரூ.40,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ஆப்பிள்!

புதிய வெளியீடுகள் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் ரூ.40,000 கோடியைக் கடக்கும் எனுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் முறையாக அமெரிக்காவுக்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயனது ரூ.40,000 கோடியைத் தாண்டும் என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான 'கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்' தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிள் அதன் மென்பொருள் மற்றும் சேவைத் துறைகளின் விற்பனை அதிகரிப்பு மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட ஐபோன் 16 தொடரை செப்டம்பர் மாதத்தில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

2023ல் வருவாய் சரிவுக்குப் பிறகு, 2024ல் அதன் மென்பொருள் பிரிவில் 3 சதவிகிதம் வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2023ல் நிறுவனமானது ரூ.29,800 கோடி மென்பொருள் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ல் ஏர்போட்கள் வேகமாக வளரும் பிரிவாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐபோன், ஐபாட், மேக், வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட ஆப்பிள் இன்டெலிஜென்ஸ், பழைய ஐபோன் மாடல்களில் அணுக முடியாது என்பதால் புதிய மாடல் ஐபோன் விற்பனை பெருகும் என எதிர்பார்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆப்பிளின் சேவை வருவாய் தொடர்ந்து வளர்ந்து 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவை எட்டும் என்றும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் மதிப்பிட்டுள்ளது. இது முதல் முறையாக 10,000 கோடியாக உயரும், அதே வேளையில் மென்பொருள் வளர்ச்சியானது 2025ல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக ரூ.40,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ஆப்பிள்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description