"முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கொள்கைகளை காங்கிரஸ் பரப்புரை செய்கிறது" - பிரதமர் மோடி விமர்சனம்
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், சத்ரபதி சம்பாஜியை மதித்து பின்பற்றுபவர்களுக்கு வாக்களிக்க போகிறீர்களா, அல்லது, அவுரங்கசீப்பின் கொள்கைகளை பரப்புவர்களுக்கு வாக்களிக்க போகிறீர்களா என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தானை தவிர காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து கனவு காண்பதாகவும், அவர்கள் பாகிஸ்தானின் மொழியை பேசுவதாகவும், பிரதமர் மோடி விமர்சித்தார்.தொடர்ந்து சிவாஜி பார்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு தனது ரிமோட் கண்ட்ரோலை, காங்கிரஸிடம் அளித்து விட்டதாகவும் சாடினார்.