மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடல் இன்று சென்னையில் தகனம்..
நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு காலமானார். டெல்லி கணேஷின் உடலுக்கு நேற்று திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இன்று காலை சென்னையில் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்படுகிறது. சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் டெல்லி கணேஷின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது இவரது உயிர் பிரிந்தது. உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக டெல்லி கணேஷ் காலமானார். இவருக்கு வயது 80.
சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்காக சிகிச்சைகளையும் பெற்று வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது மாத்திரைகள் கொடுப்பதற்காக அவரை எழுப்பியபோது அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
டெல்லி கணேஷ் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். நேற்று சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் டெல்லி கணேஷ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை பலரும் டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவரும், நடிகருமான விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் அவருடன் நடித்த பல திரை நட்சத்திரங்கள் டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயாணத்தில் டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை நாமாபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயாணத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதற்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் டெல்லி கணேஷின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.