dark_mode
Image
  • Friday, 29 November 2024

மம்தா பானர்ஜியை கங்கை நீரில் மக்கள் மூழ்கடிப்பார்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து..!

மம்தா பானர்ஜியை கங்கை நீரில் மக்கள் மூழ்கடிப்பார்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து..!
ருத்துவ மாணவி படுகொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மக்கள் தோற்கடித்து கங்கையில் மூழ்கடிப்பார்கள் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முக்கிய குற்றவாளி ஆன சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இது குறித்து கூறிய போது மேற்கு வங்க மாநில மக்கள் மம்தா பானர்ஜியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவார்கள் என்றும் அதன் பின் அவரை கங்கையாற்றில் மூழ்கடிப்பார்கள் என்றும் காட்டமான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக மேற்கு வங்க அரசு அச்சத்தில் இருப்பதாகவும் மக்களின் குரலை கொடுக்க பார்க்கிறது என்றும் ஆனால் மேற்கு வங்க மாணவர் சமூகம் விழித்துக் கொண்டுள்ளது என்றும் மேலும் ஒரு கேள்விக்கு அவர் பதில் அளித்தார். மம்தா பானர்ஜி விரைவில் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவார் என்றும் அதன் பிறகு மக்கள் அவரை கங்கையாற்றில் மூழ்கடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மம்தா பானர்ஜியை கங்கை நீரில் மக்கள் மூழ்கடிப்பார்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description