dark_mode
Image
  • Friday, 29 November 2024

மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!

மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், "அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024ஐ அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும். முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பெறுவார்கள்.

இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த முடிவால், ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே 50% ஆக உள்ளது. இனி அது 53% ஆக இருக்கும்" என தெரிவித்தார்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description