'மசூதிகளை காலி செய்யுங்கள் இல்லையேல்...': கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா
பாபர் மசூதி போன்று மதுரா உட்பட மேலும் இரண்டு இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், இன்றைக்கோ, நாளைக்கோ கோயில்கள் கட்டும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம். மேலும் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் மசூதிகளில் இருந்து முஸ்லிம்கள் அவர்களாக வெளியேறாவிட்டால் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது என கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்வரப்பா இதற்கு முன்னர் எங்கள் கோயில்களை அழித்துக் கட்டப்பட்ட மசூதிகள் விட்டுவைக்கப்படாது. அத்தகைய ஒரு மசூதி கூட இந்த நாட்டில் நிலைக்காது என கூறியிருந்தார்.