மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 2086 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 4136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்