dark_mode
Image
  • Saturday, 30 November 2024

போதை பொருட்கள் விற்ற 17 ஆயிரம் கடைகளுக்கு சீல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

போதை பொருட்கள் விற்ற 17 ஆயிரம் கடைகளுக்கு சீல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மிழகத்தில் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுவரை 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைபொருட்கள், குட்கா பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சமீபத்தில் பல இடங்களில் சோதனைகளை, போதைப்பொருட்கள் வியாபாரிகள் கைது உள்ளிட்டவையும் நடைபெற்றது.

இந்நிலையில் போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து பேசிய தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் "தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 8,66,619 கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு, 32,404 கடைகளில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த கடைகளில் இருந்து சுமார் ரூ.20.91 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு , போதை பொருட்கள் விற்றதாக 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 33 கோடி அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

போதை பொருட்கள் விற்ற 17 ஆயிரம் கடைகளுக்கு சீல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description