dark_mode
Image
  • Friday, 29 November 2024

பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிவு - பதிவாளர் நீக்கம்

பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிவு - பதிவாளர் நீக்கம்
ரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் கடந்த 27 ஆம் தேதி முதல், செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இரண்டாம் ஆண்டு 4 ஆவது செமஸ்ட்ரில், ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல் என்னும் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால், தேர்வுக்கு முன்பே நேற்றிரவு பல்வேறு இடங்களில் வினாத்தாள் கசிந்தது.

இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு முன்பே பழைய வினாத்தாளை திரும்ப பெற்றுக் கொண்ட பல்கலைக்கழகம்,
இணையதளம் வாயிலாக, புதிய வினாத்தாளை உறுப்பு கல்லூரிகள் அனுப்பியது. இந்நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்பாக, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக, புதிய பதிவாளராக ராஜசேகரன் நியமிக்கப்பட்டார். வினாத்தாள் கசிவு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 195 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்வார்கள் என்று புதிய பதிவாளர் ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிவு - பதிவாளர் நீக்கம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description