dark_mode
Image
  • Friday, 29 November 2024

பாலியல் புகாரில் இருந்து பெயர் நீக்கம்.. நெகிழ்ச்சியுடன் நிவின் பாலி சொன்ன.. அந்த வார்த்தை

பாலியல் புகாரில் இருந்து பெயர் நீக்கம்.. நெகிழ்ச்சியுடன் நிவின் பாலி சொன்ன.. அந்த வார்த்தை

கேரள மாநிலத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி எஃப்ஐஆரில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நிவின் பாலி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் மலையாள படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக மலையாள படங்கள் பல இந்திய அளவில் பெரிய ஹிட்களைக் கொடுத்து வந்தன. தரமான பல படங்களைக் கொடுத்து மலையாள இயக்குநர்கள் தமிழ் மக்களின் பாராட்டைப் பெற்று வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் ஒட்டுமொத்த கேரள திரையுலகமே அதிர்ந்து போயுள்ளது.

கேரள மாநில அரசால் கடந்த 2017 ஆம் தேதி ஹேமா கமிட்டியை அமைத்தது. பெண் நடிகர்கள், கலைஞர்களுக்கு எதிரான பாலியல் பிரச்னை குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கமிட்டியிடம் பல பெண் கலைஞர்களிடம் இருந்து தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் மற்றும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதில், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளதால் கேரள திரையுலகே அதிர்ந்து போயுள்ளது. மோகன்லால், இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் நிவின் பாலி மீதும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிவின் பாலி, இது பொய் குற்றச்சாட்டு என்றும், சட்டப்படி போராடி இந்த வழக்கில் இருந்து வெளியே வருவேன் என்றும் தெரிவித்திருந்தார். இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், பாலியல் புகார் அளிக்கப்பட்ட தேதியில் நிவின் பாலி தன்னுடன் 'வர்ஷங்களுக்கு சேஷம்' படபிடிப்பில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தப் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை எர்ணாகுளம் டிஒய்எஸ்பி கொத்தமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் அப்பெண் கூறியிருந்த தேதியில் நிவின் பாலி சம்பவம் நடந்த இடத்தில் நிவின் பாலி இல்லை என்று தெரிவிக்கபபட்டுள்ளது. மேலும், நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவரது பெயர் எஃப்ஐஆர் இல் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நிவின் பாலின் மீதான புகார் தொடர்பாக அவருடைய பயண விவரங்கள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவர் மீதான பாலியல் புகார் குறித்த குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தவில்லை. போதிய ஆதாரம் இல்லாததால் அவருடைய பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவின் பாலி தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவரின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துள் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிவின் பாலியின் பெயர் பாலியல் புகாரில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் நிவினுக்கு எதிராக அவப்பெயர் உண்டாக்கியவர்களுக்கு எதிரான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

பாலியல் புகாரில் இருந்து பெயர் நீக்கம்.. நெகிழ்ச்சியுடன் நிவின் பாலி சொன்ன.. அந்த வார்த்தை

comment / reply_from

newsletter

newsletter_description