நீதிக்காகப் போராடுவதால் பாஜக குறிவைக்கிறது: சித்தராமையா
சட்டம் மற்றும் அரசமைப்பு சட்டத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாகவும், சட்டப் போராட்டத்தின் இறுதியில் உண்மையே வெல்லும் எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான நிலமுறைகேடு தொடர்பான விசாரணையை நிறுத்திவைக்கக்கோரி சித்தராமையா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அரசியல் சதிகளை சந்தித்துள்ளேன்.
கர்நாடக மக்களின் ஆசியுடன் நான் எப்போதும் வெற்றி பெற்றுள்ளேன்.
தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் என் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளன.
ஏழைகள், சமூக நீதிக்காக போராடுவதால் என்னை குறிவைத்துள்ளனர் என சித்தராமையா பதிவிட்டுள்ளார்.