நாளை திருவோணம்.. கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு!
நாளை திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் விலை உயர்ந்தது.
இதன்படி, ஒரு கிலோ மல்லி 800 ரூபாய்க்கும் ஐஸ் மல்லி 700 க்கும் கனகாம்பரம் 1000 க்கும் ஜாதி மல்லி மற்றும் முல்லை 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி 100 க்கும் சம்பங்கி 240 க்கும் சாக்லேட் ரோஸ் 160 க்கும் பன்னீர் ரோஸ் 80 க்கும் வாடாமல்லி 200க்கும் அரளி பூ 120 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், 'ஓணம் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. எதிர்பார்த்த நிலையில் போதுமான வியாபாரம் இல்லாததால் விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்' என்றார்.