dark_mode
Image
  • Friday, 29 November 2024

திருப்பதிக்கு போறீங்களா? ஏழுமலையானுக்கு படைத்த "இந்த" உணவு பிரசாதமாக கிடைத்தால் நீங்கள் பாக்கியசாலி!

திருப்பதிக்கு போறீங்களா? ஏழுமலையானுக்கு படைத்த

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த நைவேத்தியம் மட்டும் பிரசாதமாக கிடைத்துவிட்டால் அவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான்.

திருப்பதி தரிசனமே பெருமாள் மனது வைத்தால்தான் எனும் போது இதுவும் அவர் மனது வைத்தால்தான் நடக்கும்.

கோவிந்தா! கோவிந்தா! திருப்பதிக்குச் சென்றாலே இந்த கோஷம்தான். இதை கேட்டதுமே மெய்சிலிர்த்துவிடும். திருப்பதியில் 100 டிகிரி வெயில் அடித்தாலும் திருமலையில் குளுமையான சூழலில் இந்த கோஷங்களை கேட்கும் போது உண்மையிலேயே கண்களில் இருந்து நீர் பெருகும்.

அதிலும் திருப்பதியில் உள்ள அதிசயங்களை கேட்டால் போதும், ஆஹா கேட்டுக் கொண்டே இருக்கலாம் என தோன்றும். அந்த வகையில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை தோறும் வில்வ இலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக தற்போது மார்கழி மாதம் முழுவதும் வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வ இலை சிவனுக்குரியது. அது போல் வில்வம் அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படும் ஒரே பெருமாள் கோயில் ஏழுமலையான் கோயில்தான்.

திருமலை 3000 அடி உயரத்தில் குளிர் பிரதேசமாகும். ஆனால் இங்கு ஏழுமலையான் சிலை மட்டும் வெப்பமாகவே இருக்கும். 110 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது இன்றும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. அது போல் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது. ஆனால் கொண்டாட்டங்கள் மட்டும் உண்டு.

அது போல் உலகிலேயே மிகவும் அரிதான ஒற்றைக் கண் நீலம் என்ற அரிய வகை ரத்தினக் கல் ஏழுமலையான் கோயிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ 100 கோடி என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதம் என ஒன்று தயாரிப்பார்கள். அது உடைந்த மண் சட்டியில் வைத்துதான் படைப்பார்கள். இப்படி ஒரு படையல் வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்ற பிரசாதங்கள் தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது. அந்த நைவேத்தியம் பிரசாதமாக கிடைக்கப்பெற்றால் அவர்கள் பாக்கியசாலிகள்.

திருப்பதிக்கு போறீங்களா? ஏழுமலையானுக்கு படைத்த

comment / reply_from

related_post

newsletter

newsletter_description