"தவெக மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்" - எடப்பாடி பழனிச்சாமி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற அதிமுகவின் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரும் பொதுசேவை செய்ய வேண்டும் என விரும்புகிறார். அந்த விருப்பத்தின் அடிப்படையில் கட்சி தொடங்கியுள்ளார். அவரின் மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் இருந்தபோது 36,000 போராட்டங்கள் நடைபெற்றது. அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமல்லாது அதிமுகவின் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தெரிவித்தார்.