தமிழகத்திற்கு 3000 கன அடி தண்ணீர்... காவிரி மேலாண்மை அதிரடி உத்தரவு!!
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இதனை எதிர்த்து கர்நாடகாவில் இன்று பந்த் அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த பந்த்தை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடத்தப்பட்டது.
அதில் நிலுவையில் உள்ள அளவையும் சேர்த்து, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என்ன தமிழகம் கோரிக்கை விடுத்தது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் கர்நாடக அரசு செய்யப்போவதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.