dark_mode
Image
  • Friday, 29 November 2024

தசரா திருவிழா; குலசை முத்தாரம்மன் கோயிலில் 4.57 கோடி ரூபாய் உண்டியல் வருவாய்

தசரா திருவிழா; குலசை முத்தாரம்மன் கோயிலில் 4.57 கோடி ரூபாய் உண்டியல் வருவாய்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து முடிந்த நிலையில், கோயிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 63 தசரா திருவிழா தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் வருவாயாக 4 கோடியே 57 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்தது. மேலும் 115 கிராம் தங்கம், 2689.900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.

 

கோவிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் மூலம் 91 லட்சத்து 95 ஆயிரத்து 65 ரூபாய் ரொக்கமாக வருவாய் வந்துள்ளது. மேலும் 30 கிராம் 400 மில்லி தங்க பொருட்களும், 820 கிராம் 300 மில்லி வெள்ளி பொருட்களும் வருவாயாக கிடைத்துள்ளது.

 

அதே போல் தசரா திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட 65 தற்காலிக உண்டியல்கள் மூலம் 3 கோடியே 65 லட்சத்து 27 ஆயிரத்து 965 ரூபாயும், 84 கிராம் 900 மில்லி தங்க பொருட்களும், 1869 கிராம் 600 மில்லி வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளது.

 

மொத்தமாக தசரா திருவிழாவின் போது உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 57 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 115 கிராம் 300 மில்லி தங்க பொருட்களும், 2689 கிராம் 900 மில்லி வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர 15 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது.

 

கடந்த வருடம் 4 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 516 ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தசரா திருவிழா; குலசை முத்தாரம்மன் கோயிலில் 4.57 கோடி ரூபாய் உண்டியல் வருவாய்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description