ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் என்பவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனு விசாரணை இன்று நடந்தது.
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோதமான பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த நிலையில் அவரது சகோதரர் முகமது சலீம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இந்த வழக்கில் ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர் உள்பட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக் திரைப்பட நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் கைது செய்யப்பட்டதாகவும், அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.