ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்கள்: அவசரமாக விசாரிக்க முறையீடு
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பீட்டா மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது என பீட்டா அமைப்பு வாதாடியுள்ளது. மேலும் 2017 முதல் 2022 வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது என பீட்டா தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.