சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று(நவ. 26) எழும்பூரில் இருந்து புறப்படும்!
சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை திருவிழாவையொட்டி சென்னை சென்ட்ரல் ர்யில் நிலையத்தில் இருந்து கேரளத்தின் கொல்லம் பகுதிக்கு கடந்த நவம்பர் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (06111) இயக்கப்படுகிறது. இது ஜனவரி 14 ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியாக மறுநாள்(புதன்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்குச் சென்றடையும்.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்று(நவ. 26) இந்த ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக எழும்பூரில் இருந்து இரவு 11.20 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Change in the Origin of Express Train
— Southern Railway (@GMSRailway) November 26, 2024
Train No.06111 Dr MGR Chennai Central – Kollam Superfast Exp Special scheduled to leave Dr MGR Chennai Central at 23.20hrs on 26th November, 2024 will originate from Chennai Egmore instead of Dr MGR Chennai Central due to operational reasons