dark_mode
Image
  • Friday, 29 November 2024

சென்னையில் மிதிவண்டி பாதைகளை காணவில்லை: அன்புமணி

சென்னையில் மிதிவண்டி பாதைகளை காணவில்லை: அன்புமணி

சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்குள்ளன என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சிகாகோவில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்ற விடியோவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 4) காலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த விடியோவைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்று கேட்டுள்ளார்.

இதற்கு தன்னுடைய எக்ஸ் தளப் பதிலளித்த முதல்வர் மு. க. ஸ்டாலின், ''அன்புள்ள சகோதரரே (ராகுல் காந்தி), ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாக சைக்கிளில் பயணித்து சென்னையின் இதயத் துடிப்பை அனுபவிப்போம். தங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய இனிப்பு இன்னும் பாக்கியுள்ளது. சைக்கிள் ஓட்டிய பிறகு, இனிப்புடனான தென்னிந்திய மதிய உணவை எனது வீட்டில் அருந்தலாம்'' எனக் குறிப்பிட்டு இருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,"சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே? சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மிதிவண்டி பாதைகளை காணவில்லை: அன்புமணி

comment / reply_from

related_post

newsletter

newsletter_description