dark_mode
Image
  • Saturday, 30 November 2024

சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை குறிவைக்கிறது- அண்ணாமலை

சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை குறிவைக்கிறது- அண்ணாமலை

ம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை குறிவைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஹிண்டன்பர்க் போல வருங்காலத்தில் நிறைய தாக்குதல்கள் இந்தியா மீது தொடுக்கப்படும். இந்தியா வலிமையாக இருக்கிறது என்பதால் உலகளவில் இதுபோன்ற சதி நடக்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி ரூபாய் சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நோக்கம். செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். செபி நோட்டீஸ் கொடுத்ததற்கு அந்த நிறுவணம் மீண்டும் குற்றச்சாட்டை முன் வைக்கிறது. ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம். பங்கு சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் லாபம் பார்க்கிறது" என்றார்.

அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய தலைவர் மாதபி புச்க்கு பங்குகள் இருப்பதாகவும், அதானி பங்குகளில் செபி தலைவர் மாதபி புச் முதலீடு செய்திருப்பதாக Hindenburg Research அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை குறிவைக்கிறது- அண்ணாமலை

comment / reply_from

related_post

newsletter

newsletter_description