dark_mode
Image
  • Friday, 29 November 2024

கொடைக்கானலில் இந்த வகையான சுற்றுலா பேருந்துகளுக்குத் தடை..!

கொடைக்கானலில் இந்த வகையான சுற்றுலா பேருந்துகளுக்குத் தடை..!

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அப்படி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் படி நகரின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் சோதனை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் சோதனை மற்றும் நுழைவு கட்டண வசூல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.

இதனால் அந்த பகுதியில் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா பேருந்துகளை இயக்க விதிக்கப்பட்ட தடையை வருகிற 18-ந்தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அத்துடன் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் இந்த வகையான சுற்றுலா பேருந்துகளுக்குத் தடை..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description