கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்.. தமிழகம் முழுக்க பரந்த உத்தரவு.!
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்குக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டிருப்பதாகவும் அவர்களைத் தனிமைப்படுத்தி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு எல்லைக்குள் 'நிபா வைரஸ்' நோய் தொற்று அறிகுறிகளுடன் (காய்ச்சல், வலிப்பு, தலைவலி) சந்தேகத்திற்குரிய நோயாளிகளை கண்டறிந்து உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்துடன் இணைந்து சுகாதார தகவல் தளத்தின் மூலம் கடுமையான அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் (AES) நோயாளிகளை சரியான கண்டறிய வேண்டும்.
முக்கியமாக கேரளாவை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 'நிபா வைரஸ்' பாதிப்புக்கான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, அறிகுறி உள்ள அனைத்து நபர்களையும் பரிசோதிக்க வேண்டும்.
கேரள எல்லையோர பகுதி சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக் குழுக்கள் செயல்