dark_mode
Image
  • Friday, 29 November 2024

கெஜ்ரிவால் ராஜினாமா.... டெல்லியின் அடுத்த முதல்வர் பதவி யாருக்கு...?

கெஜ்ரிவால் ராஜினாமா.... டெல்லியின் அடுத்த முதல்வர் பதவி யாருக்கு...?

ந்தியாவின் தலைநகர் டெல்லியின் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் கூட.

இவர் தற்போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் அடுத்த டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.அதன்படி அரசு கோப்புகளில் கையெழுத்திட கூடாது. தலைமை செயலகம் செல்ல கூடாது . வழக்கு பற்றி வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது. என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு பிறகு தான் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்வேன் என பதிவிட்டுள்ளார். 2025 பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே அதாவது நவம்பர் மாதமே நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பிறகு சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் டெல்லி மாநில முதல்வர் பதவிக்கு யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், மக்கள் தீர்ப்புக்கு பின்னர் தான் தான் பதவிக்கு திரும்புவேன் என கூறிவிட்டார்.இதனால் டெல்லி முதல்வர் பதவிக்கு மணீஷ் சிசோடியா வர வாய்ப்பில்லை.
டெல்லி இடைக்கால முதல்வர் பதவிக்கு முன்னணியில் இருப்பவர் மாநில கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அதிஷி. இவர் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு முகமாக அறியப்படுபவர் . ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் கெஜ்ரிவாலுக்கு பதிலாக தேசிய கொடியேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக , 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக வென்ற சௌரப் இவர் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பில் இருகிறார். ராஜீவ் சதா , ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோரும் டெல்லி இடைக்கால முதலமைச்சர் ரேஸில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெஜ்ரிவால் ராஜினாமா.... டெல்லியின் அடுத்த முதல்வர் பதவி யாருக்கு...?

comment / reply_from

related_post

newsletter

newsletter_description