dark_mode
Image
  • Friday, 29 November 2024

குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை - திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை

குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை - திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. பெற்றோர்கள் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார் .

 

மேலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே வதந்தி பரப்பிய வேடசந்தூர் மற்றும் வேடசந்தூரில் வதந்தி பரப்பிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை பரவவிட்ட வடிவேல், தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வந்தால் உண்மைத் தன்மை அறியாமல் பகிர வேண்டாம் எனவும், தொடர்ச்சியாக யாரேனும் இது போன்ற தகவல்களை பகிர்ந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தங்களது பகுதியில் தெருக்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பின், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குதகவல் தெரிவிக்க வேண்டும். பொது மக்களே விசாரிப்பது, வாக்குவாதம் செய்து தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை - திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை

comment / reply_from

related_post

newsletter

newsletter_description