dark_mode
Image
  • Friday, 29 November 2024

'காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்

'காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்
ஹெச். ராஜா

கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் யாருக்கும் பாதிப்பில்லை. பாஜக கொண்டு வந்த காரணத்தால் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் ஈ.வி.கேஸ். இளங்கோவன் என்னைவிட 15 வயது மூத்தவர். அவருக்கு வெட்கமே கிடையாதா. மகன் இறந்ததால் காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அவரைப் போன்றவர்கள் என்னைப்பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்கள் அதிகளவில் பாஜக-வில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள். பாஜக-வில் 32 ஆண்டுகளாக இருக்கிறேன். அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச எங்களுக்கு உரிமை இல்லை.

அப்போது அவர் கூறுகையில், "பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பாஜகவில் 31 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 1 கோடி உறுப்பினர்கள் இலக்கு வைத்து சேர்க்கை நடத்தி வருகிறோம்.

அதை பற்றி தலைமை முடிவு செய்யும். திருமாவளவன் மாநாடு மக்களை ஏமாற்றும் செயல். மாநில அரசு 500 மதுக்கடைகளை மூடியதாக சொல்கிறார்கள். ஆனால் 1,000 மனமகிழ் மன்றங்கள் தொடங்கியுள்ளனர்.

இல்லையென்றால் அவர்களின் அனைத்து தவறுகளையும் அம்பலப்படுத்துவோம்." என்றார். முன்னதாக ஈ.வி.கேஸ். இளங்கோவன், "ஹெச். ராஜா ரிட்டயர்டு ஆக வேண்டியவர். அண்ணாமலை இல்லாததால் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது." என்று கூறியிருந்தார்.
'காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description