dark_mode
Image
  • Friday, 29 November 2024

காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? திரண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்.. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை

காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? திரண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்.. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை

6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடந்து வரும்நிலையில், காலாண்டு விடுமுறை குறித்த முக்கிய கோரிக்கையை ஆசிரியர் சங்கம் விடுத்திருக்கிறது..

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருடா வருடம் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுவதும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

எனினும், இந்த வருடம் லோக் சபா தேர்தல் காரணமாக 1 முதல் 9ம் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது... இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக , செப்டம்பர் 28, அக்டோபர்-5, 19, 26, நவம்பர் -9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வாட்டும் வெயில்: கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் போலவே, வெயில் வாட்டியெடுத்து வருவதால், சனிக்கிழமை மட்டும் தற்போது அரைநாளாக பள்ளி நாட்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வியாண்டு நாட்காட்டியை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கல்வியாண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என்று முதலில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எனவே, வேலை நாட்களை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட அட்டவணையை 2 நாட்களுக்கு முன்பு கல்வித்துறை வெளியிட்டிருந்தது.

5 நாட்கள் விடுமுறை: அதன்படி, மொத்தம் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது, காலாண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்ததுமே, வருகிற சனிக்கிழமை முதல் அதாவது, 28-ந்தேதி முதல் 2ம் தேதி வரை என மொத்தம் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், காலாண்டு விடுமுறைக்கு பிறகு வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.ஆனால், வெறும் 5 நாட்கள்தான் காலாண்டு விடுமுறையா? 9 நாட்களாக விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் உள்ளதாவது: "கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிகிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4-ந் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்.

நீட்டிக்கப்படுமா: ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? திரண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்.. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை

comment / reply_from

related_post

newsletter

newsletter_description