dark_mode
Image
  • Saturday, 30 November 2024

கரும்பு விவசாயி சின்னம் கோரி.. சீமான் தொடர்ந்த வழக்கு.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரும்பு விவசாயி சின்னம் கோரி.. சீமான் தொடர்ந்த வழக்கு.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விதிகளின் படியே தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6.72 சதவீத வாக்குகள் கிடைத்தது. இதுவரை எந்த தேர்தலிலும் சீமான் கட்சி வெற்றி பெற வில்லை என்றாலும் வாக்கு சதவிகிதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.

 

டெல்லி கோர்ட் தள்ளுபடி செய்தது: வரும் லோக்சபா தேர்தலிலும் கூடுதல் வாக்குகளை பெற நாம் தமிழர்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏனென்றால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதனால் சீமான் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.

விதிகளின் படியே ஒதுக்கீடு: மேலும் எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தார். இந்த நிலையில், சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், மனுதாரர் கூறும் படி எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறி சீமான் தொடர்ந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க கோரி, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சீமான் சந்தித்து பேசினார்.

உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறேன்: பின்னர் பேட்டி அளித்த சீமான், தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக இருப்பது நாம் தமிழர் கட்சி. இதை பொருட்படுத்தாமல், கர்நாடகாவைச் சேர்ந்த கட்சி, சின்னம் பெறுவதற்காக முதலில் மனு கொடுத்ததால் அவர்களுக்கு சின்னம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். முதலில் மனு கொடுத்து யார் எந்த சின்னம் கேட்டாலும் கொடுப்பார்களா?

விவசாயி சின்னத்தில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதை பார்த்து, அதில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் சரியான முறை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளேன். அதற்கு 2 நாட்களில் தீர்வு கிடைக்கும். அதன்பின், உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறேன். சின்னம் கிடைக்கவில்லை என்றாலும், இறுதியாக என்ன சின்னம் கிடைக்குமோ அதை வைத்து போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

கரும்பு விவசாயி சின்னம் கோரி.. சீமான் தொடர்ந்த வழக்கு.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

comment / reply_from

related_post

newsletter

newsletter_description