dark_mode
Image
  • Saturday, 30 November 2024

கருத்துச் சுதந்திரம் நீட்டிக்கப்பட வேண்டும்- எக்ஸ் நிறுவனம்

கருத்துச் சுதந்திரம் நீட்டிக்கப்பட வேண்டும்- எக்ஸ் நிறுவனம்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில்,வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, 12 அம்ச கோரிக்கைகாளிய வலியுறுத்தி விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
 
இந்த நிலையில், போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீஸர் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
எனவே விவசாயிகள் தொடர்புடைய  177கணக்குகளை  தற்காலிகமாக முடக்க   மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைசகம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்த  உத்தரவுகள்  வெளியிடப்பட்டன.
 
அதன்படி 177 சமூக ஊடக கணக்குகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலையில், பேஸ்பு, இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட்  உள்ளிட்ட சமூக ஊடகதளங்களில் கணக்குகள், இணைப்புகளை மத்திய அரசு முடக்க உத்தரவிட்டது.
 
இந்த  நிலையில், இந்த நடவடிக்கை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை.கருத்துச் சுதந்திரம் இப்பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று  நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று எக்ஸ்   நிறுவனம் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் நீட்டிக்கப்பட வேண்டும்- எக்ஸ் நிறுவனம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description