dark_mode
Image
  • Friday, 29 November 2024

கடல் அலை இயல்பைவிட அதிக அளவு முன்னேறி வந்து செல்லும்- குமரி ஆட்சியர் எச்சரிக்கை

கடல் அலை இயல்பைவிட அதிக அளவு முன்னேறி வந்து செல்லும்- குமரி ஆட்சியர் எச்சரிக்கை

ன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்களும் கடலோரங்களில் வசிப்போரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.

எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலை இயல்பைவிட அதிக அளவு முன்னேறி வந்து செல்லும்- குமரி ஆட்சியர் எச்சரிக்கை

comment / reply_from

related_post

newsletter

newsletter_description