dark_mode
Image
  • Friday, 29 November 2024

எல்லை தாண்டி மீன் பிடிப்பு... தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடிப்பு... தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

மிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 21 மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு, மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும், மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் அதிபராக அநுர குமார திஸ்நாய்க பதவியேற்ற பின்பும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்வதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.

எல்லை தாண்டி மீன் பிடிப்பு... தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

comment / reply_from

related_post

newsletter

newsletter_description