dark_mode
Image
  • Friday, 29 November 2024

என் திறமை குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: பழனிசாமி காட்டம் பழனிசாமி காட்டம்

என் திறமை குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: பழனிசாமி காட்டம் பழனிசாமி காட்டம்
''என் திறமை குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.திருச்சி விமான நிலையத்தில் அவர் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்கவில்லை என, ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெ., மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்த பின், நான்காண்டு காலம் சிறந்த ஆட்சியை வழங்கினேன். வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னை பற்றி விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது.புதிதாக, 11 மருத்துவக் கல்லுாரிகள், ஆறு சட்டக்கல்லுாரிகள் கொண்டு வந்தோம். பல்வேறு திட்டங்களை கடந்த ஆட்சியில் கொண்டு வந்தோம். அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காகவே, சேலம் கால்நடைப்பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தி.மு.க., கிடப்பில் போட்டுள்ளது. தற்போது விவசாய பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் கூட, டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்கவில்லை.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து, பொதுப்பணி, உயர்கல்வி போன்ற துறைகளில், இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றது.

சட்டம் - ஒழுங்கை காப்பதில் முதன்மையாக அ.தி.மு.க., ஆட்சி இருந்தது. தி.மு.க., ஆட்சியை அகற்ற நினைக்கும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்.தமிழகத்தில் போதை பொருள் விற்பனை தாராளமாக உள்ளது. உதயநிதி 100க்கு 100 மார்க் வாங்கி சிறந்த அமைச்சராக வந்துள்ளார் என்றால், மற்ற அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லையா?கருணாநிதி அடையாளத்தில் தான் ஸ்டாலின் முதல்வர் ஆகி உள்ளார். ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.கருணாநிதி குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பதவி கிடைக்கும்.

அ.தி.மு.க.,வில் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிடைக்கும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. பொதுமக்கள் மீது கடன் சுமையை சுமத்தியது தான், தி.மு.க., அரசின் சாதனை. மக்களுக்கு பயனற்ற திட்டங்களை கொண்டு வந்து, மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுவதை தடுக்க வேண்டும். கருணாநிதி மகன் என்ற அடையாளம் இல்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது.

அ.தி.மு.க.,வின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா? ஒத்த கருத்துடையவர்களுடனும், அ.தி.மு.க., தலைமையை ஏற்பவர்களுடனும் தான் கூட்டணி.இவ்வாறு அவர் கூறினார்.டெல்டாவை காப்பாற்றினோம்பழனிசாமி கூறுகையில், ''ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தான், டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. முதல்வராக இருந்த ஜெயலலிதா, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்து, ஸ்டாலின் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, டெல்டா விவசாயிகளை காப்பாற்றினார். மேட்டூர் அணையின் உபரிநீரால் வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம், அ.தி.மு.க, ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக இந்த ஆட்சியில் கிடப்பில் போட்டுள்ளனர்,'' என்றார்.
என் திறமை குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: பழனிசாமி காட்டம் பழனிசாமி காட்டம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description