"எங்கும் ஊழல்".. எதிலும் ஊழல்".. திமுக, அதிமுக ரெண்டுமே ஒன்னு தான்.. சீமான் கடும் தாக்கு.!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
இந்த ஊழல் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் குழு அமைத்து வழக்கம்போல் கிடப்பில் போட்டுவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த ஊழல் திமுக மற்றும் அதிமுக என இரு ஆட்சிகளிலும் தொடர்ந்துள்ளது. ஒரு நல்ல பதவியில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தக் கூடியவர்கள் அவர்களை இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக இருக்கிறது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனி எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.