dark_mode
Image
  • Friday, 29 November 2024

எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது - ஓபிஎஸ்

எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது - ஓபிஎஸ்
ங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அது நடக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற வீடியோ பதிவிட்டதும், பின்னர் அதை நீக்கியது குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், பதிவு செய்ததும் அதை நீக்கியதும் திருமாவளவன் தான். அவர்தான் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். என்னுடைய அரசியல் பார்வையில். யார் கேள்வி கேட்டார்களோ மீண்டும் யார் வாபஸ் பெற்றார்களோ அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் பொதுவாக தான் அழைப்பு விடுத்துள்ளார். எங்களுடைய நிலைப்பாடு தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். இதற்கு பூர்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது இதற்கு பதில் கிடைக்கும்.

என்னை பொறுத்தவரை மது தமிழகத்தில் இருக்கக் கூடாது தான் என்னுடைய நிலைப்பாடு. முதல்வர் வெளிநாட்டு பயணம் உண்மையிலேயே அந்த முதலீடு ஈர்க்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்தால் தொழிற்சாலை துவங்கினால் உள்ளபடியே நான் வரவேற்பேன்.

பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இளைய மகன் அரசியலில் உள்ள சூழலில் மூத்த மகன் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அது நடக்காது எனக் கூறினார்.
எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது - ஓபிஎஸ்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description